deepamnews
இலங்கை

வரவு செலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாடு திரும்புகின்றார் பசில்

வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார்.

சமீபத்தைய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து பதவி விலகி செப்டம்பரில் அமெரிக்க சென்ற பசில் ராஜபக்ச நாளை மீண்டும் நாடு திரும்பவுள்ளார் அவர் வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டுபெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பது குறித்த முயற்சிகளை ஆரம்பிப்பார்.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள பசில் ராஜபக்ச நாளை  நாட்டை வந்தடைவார் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் வரவு செலவுதிட்டத்திற்கான ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதே அவரது உடனடி நடவடிக்கையாக காணப்படும்.

வரவு செலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது இதன் மூலம் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை நெருக்கடி இன்றி செயற்படலாம் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

Related posts

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியரின் அறிவுறுத்தல்

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்ப்பு

videodeepam

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இறக்குமதிகள்  வீழ்ச்சி – தம்மிக்க பெரேரா தெரிவிப்பு

videodeepam