deepamnews
இந்தியா

இந்தியாவின் வளர்ச்சிக்கு புத்தரின் போதனைகளே காரணம் – பிரதமர் மோடி தெரிவிப்பு

“கடந்த ஒன்பது ஆண்டுகளாக புத்தரின் போதனைகளை பின்பற்றியே இந்தியாவின் முன்னேற்றம் அமைந்துள்ளது. குறிப்பாக, புத்தரின் கோட்பாடு, நடைமுறை மற்றும் உணர்தல் ஆகிய மூன்று முக்கிய வழிகளை இந்திய பின்பற்றி வருகின்றது.

இந்தியாவின் வேகமான முன்னேற்றத்திற்கு இதுவே முக்கிய காரணம்.” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இந்திய மாறி வருகின்றது.

யுத்தங்கள், பூசல்கள் மற்றும் பகை உணர்வுகளை தவிர்த்தால் மாத்திரமே பூரண சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்.

புத்தரின் போதனைகள் மகிழ்ச்சிக்கான வழிகளை பெறுவதை தெளிவாகக் கூறியுள்ளது, நாட்டு மக்களின் மகிழ்ச்சியிலே உண்மையான நாட்டின் வளர்ச்சி உள்ளது.

அந்தவகையில், புத்தரின் போதனைகளை பின்பற்றி, அதைக் கடைப்பிடித்து எமது இந்தியா கடந்த ஆண்டுகளில் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதேவேளை, குறுகிய சிந்தனைகளை விட்டு வெளியே வந்து, முழு உலகும் மகிழ்ச்சியில் இருப்பதற்கு புத்தரின் சிந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

இயற்கை சீற்றங்கள், யுத்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட உலகளாவிய நாடுகளுக்கு இந்தியா தனது முழுப் பலத்தை பிரயோகித்து மனித நேயத்துடன் எப்போதும் செயல்படும்.

கடந்த நூற்றாண்டுகளில், சில நாடுகள் மற்றவர்களைப் பற்றியும், எதிர்கால தலைமுறையைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

புத்தரின் பாதை எதிர்காலத்தின் பாதை, நிலைத்திருக்கும் பாதை.

ஆகவே புத்தரின் போதனைகளை உலகம் பின்பற்றுமாயின் எல்லா நெருக்கடிகளையும் இலகுவில் சமாளிக்கலாம்.” இவ்வாறு புதுடெல்லியில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு!

videodeepam

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 24 பேர் கைது

videodeepam

ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிட்டால்  அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்! – சீமான் உறுதி.

videodeepam