deepamnews
இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த மக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மே 31ஆம் திகதி வரை பொதுமக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தமது முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்க முடியும்.

அவற்றை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சு கோரியுள்ளது.

அதன்படி, உரிய ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை கருத்தில் கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுவதுடன், அதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்து ஆலோசிக்கப்படும்.

Related posts

பாடசாலை நேரங்களில் வாகனங்கள் சோதனை- மாணவர்களுக்கு எற்படும் இடையூறு..

videodeepam

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மரணம் வரை செல்லும் அபாயம்!

videodeepam

கோட்டாபய ராஜபக்ஷவால் இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 5,978 மில்லியன் ரூபா நட்டம்

videodeepam