deepamnews
சர்வதேசம்

ரஷ்யா ஏவிய 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவிப்பு

உக்ரேன் மீது ரஷ்யா நேற்றிரவு ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது. எனினும், திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை கியீவ் நகரம்மீது நேற்று முன்தினம் இரவு ஏவியது என உக்ரேன் கூறியுள்ளது.

தரை, கடல், வானிலிருந்து 30 சீர்வேக ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதகாவும், இதனால் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு  தெரிவித்தள்ளது.

இவற்றில் 29 ஏவுகணைகளை உக்ரேனிய வான் பாதுகாப்பு படைப்பிரிவினால் அழிக்கப்பட்டதாகவும் அவ்வமைக்சு தெரிவித்துள்ளது.

எனினும், நேற்று முன்தினம் இரவு  நடத்தப்பட்ட தாக்குதல்களில், அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டன என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரேனியப் படையினரின் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் இத்தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பாலஸ்தீனின் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை,

videodeepam

10 தடவைகளுக்கு மேல் அமெரிக்க பலூன்கள் அத்துமீறின – சீனா குற்றச்சாட்டு

videodeepam

பெருவின் முன்னாள் ஜனாதிபதி பதவி நீக்கம் – உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை

videodeepam