deepamnews
சர்வதேசம்

பெருவின் முன்னாள் ஜனாதிபதி பதவி நீக்கம் – உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பெருவின் முன்னாள் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டமை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு அந்த நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

மாநில சபை உறுப்பினர்கள மற்றும் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அந்த நாட்டு தலைநகரில் 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக அங்கு கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இதன் காரணமாக இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

போராட்டத்தின் போது 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

எவ்வாறாயினும் புதிய ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இதேவேளை, மறுபுறத்தில் உள்ளூர் விமான நிலையங்களை மூடுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெருவின் தென்கிழக்கு நகரான குஸ்கோவில் சிக்கியுள்ளனர்.

Related posts

பிரித்தானியாவில் தீவிரமடையும் பறவை காய்ச்சல் –  கிறிஸ்துமஸ் காலத்தில் வான்கோழிக்கு தட்டுப்பாடு

videodeepam

வட அயர்லாந்திற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் – பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

videodeepam

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்வு!

videodeepam