deepamnews
இலங்கை

வெட் வரி திருத்தச் சட்டமூலம் இன்று மீள சமர்ப்பிக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

வெட் வரி திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளவுள்ளதாக அவர் அறிக்கையொன்றினூடாக கூறியுள்ளார்.

இந்த சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பொருள்கள் தொடர்பான பட்டியல் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பொருள்கள் பட்டியலை கோரி எதிர்க்கட்சியினர் நேற்று அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெட் வரி திருத்தச் சட்டமூலம் நேற்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், கோரமின்மையால் இது தொடர்பான விவாதம் இடைநடுவே நிறுத்தப்பட்டதுடன், நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

 புங்குடுதீவில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்தினை ஏந்திய ஊர்திப் பவனி.

videodeepam

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை – இளம் பெண் உட்பட நால்வர் கைது..!

videodeepam

வல்லிபுரம் பகுதில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றல், சந்தேக நபர் ஒருவரும் கைது!

videodeepam