deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் டிசம்பர் 12 இல் விசேட கலந்துரையாடல்

எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும் எனவும் நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய முதலீட்டாளர்கள் தேவை எனும் அடிப்படையில், அதற்கான வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில், தற்போதுள்ள பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மேலும் மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யூரியா உர விநியோகம் இன்று ஆரம்பம்

videodeepam

திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலி

videodeepam

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

videodeepam