deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அரச இரகசியங்களை கசிய விட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த வழக்கில் மற்றுமொரு பிரதிவாதியான பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூட் குரேஷிக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரகசிய தகவல்களை கசிய விட்டனர் என்று பிரதிவாதிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் பெப்ரவரி 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

Related posts

பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிஷி சுனக்

videodeepam

லண்டன் விமானத்தில் இளைஞரின் சடலம் மீட்பு

videodeepam

அமெரிக்க  வெள்ளை மாளிகை அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு

videodeepam