deepamnews
இலங்கை

இன்று முதல் முறையாக கூடுகிறது தேசிய சபை

தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைக்கு அமைய, உருவாக்கப்பட்ட தேசிய சபைக்கு அந்தந்த அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சபாநாயகர் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, ஆகிய கட்சிகள் இந்த தேசிய சபையில் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தன.

தேசிய சபைக்கு சபாநாயகரினால் பெயரிடப்பட்டிருந்தவர்களில் ஒருவரான தமிழ் மக்கள்  கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும், இந்த தேசிய சபையில் அங்கம் வகிக்கப் போவதில்லை என பின்னர் அறிவித்திருந்தார்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய சபையை புறக்கணிக்கப் போவதாகவும் தங்களின் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் எவரும், பங்கேற்கமாட்டார்கள் என்றும், அதன் தலைவரான மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்காக 1,000 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

videodeepam

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறுவோரும் வரி செலுத்த வேண்டும்

videodeepam

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்

videodeepam