குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணப் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுகிறார்கள் என்றும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர்,
“ குருந்தூர் மலை வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரையாகும்.
இந்த விகாரையின் புனரமைப்புக்கு தடையேற்படுத்துவது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.
வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் காணப்பட்டால், அதற்கு எதிராக பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள்.
கூட்டமைப்பினரே அவ்வாறு செயற்படுகிறார்கள்.
ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறும் போது தான் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் சமய பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் தொடர்பாக எவரும் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.