இணையவழிச் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இணைய வழிச் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதையடுத்து, அதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில், கடந்த செப்ரெம்பர் 26ம் திகதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணையவழிச் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது.
இந்தநிலையில், இணையவழிச் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பான அரசிதழும் வெளியிடப்பட்டுள்ளது.