போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளன.
ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான இந்த வரைவுத் தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும்.
போர்க்குற்ற விசாரணையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கு இது உதவும்.
படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் வலுவடைவதற்கு நிச்சயம் உதவும்.
இத்தகைய சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு.
நாளை மறுநாள் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.