இலங்கையில் கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாவின் விலை 110 ரூபாவினால் குறைந்துள்ள போதிலும், பேக்கரி பொருட்கள் முன்னைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
இதனடிப்படையில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாக குறைவடைந்துள்ளது.