deepamnews
இலங்கை

படிப்படியாக வலுவிழக்கும் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக, யாழ்ப்பாணத்திற்கு வட கிழக்காக 410 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற் குதிசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கமானது, அடுத்த 12 மணித்தியாலங்களில் அதுபெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா.

videodeepam

விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் நாடு வீழ்ச்சியடைந்திருக்காது – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

videodeepam

மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

videodeepam