deepamnews
இலங்கை

வடக்கு, கிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு -விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகுளிருடன் கூடிய காலநிலையால், வடக்கு, கிழக்கில் பெரும் தொகையிலான கால்நடைகள் மரணமடைந்தன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லலை – சாம் ராஜசூரியர்

videodeepam

நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார் அலி சப்ரி ரஹீம்!

videodeepam

தபால் மூல வாக்களிப்பு குறித்த திகதியில் இடம்பெறும் சாத்தியம் – தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை

videodeepam