deepamnews
இலங்கை

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு புதிய அங்கீகாரம் – விரைவில் இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 23 ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் டிசம்பர் 14 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை மற்றும் புதுச்சேரிக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனிடையே,  பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்த கப்பல் சேவை முன்னெடுக்கப்படுவதற்கு இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நபிகள் நாயகத்தின் ஜனதின துவாப் பிராத்தனை.

videodeepam

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் இணைக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் விபத்து

videodeepam