deepamnews
இலங்கை

திறைசேரியின் வருமானத்தை விட செலவு அதிகம் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன

திறைசேரிக்கு 147 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, வரலாற்றில் முதல் தடவையாக அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு உரிய திகதியில் மாதாந்த வேதனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, சமுர்த்தி நிதியம் இருப்பதன் காரணமாக சமுர்த்தி கொடுப்பனவை அரசாங்கம் தாமதிக்க முடியாது என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஹிரு செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமர மத்துமகளுகே, இது வெறுமனே தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகை இன்று

videodeepam

வல்லையில் மூதாட்டியின் தாலி அபகரிப்பு

videodeepam

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்!

videodeepam