அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்) ரஷ்யா விலகுகின்றது என ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.
மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியிருந்தார்.
மேலும் கூறுகையில்,உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், ஐரோப்ப நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகின்றன. இந்தச் சூழலில் நாங்கள் போரை கைவிடமாட்டோம்.
இதேவேளை அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்) ரஷ்யா விலகுகின்றது.
நமது அணு ஆயுத பலத்தைப் பறிக்க ஐரோப்பா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இனி அமெரிக்கா அணு ஆயுத சோதனை மேற்கொண்டால் நாங்களும் அணு ஆயுத சோதனை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
புடினின் இந்த அறிவிப்பை தொடர்ந்தே அமெரிக்க ஜகாதிபதி பைடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. எனினும் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.