deepamnews
இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

நிவித்திகல பிரதேச சபைக்கு போட்டியிட இருந்த வேட்பாளரின் மரணத்துக்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த விடாமல், தேவையான அளவு நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கொடுக்காது முடக்கி வைத்திருப்பதும் நிதி அமைச்சரான ஜனாதிபதியே என்றும் குறிப்பிட்டார்.

திருகோணமலை சல்லி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாரை ஏவி விட்டு இத் தாக்குதலை நடாத்தி அதன் மூலமாக ஓர் உயிர் பரிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டால் நிலமை இன்னும் மோசமடையும் என்றும் குறிப்பிட்டார்.

அப்படி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரித்தும் கிடையாது என்றும்  சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

Related posts

வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வெண்ணைத்தாழித் திருவிழா.

videodeepam

இலங்கையில் உற்பத்தி செய்யப்படாத மீன்களை மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி! – அமைச்சர் டக்ளஸ்  தகவல்.

videodeepam

 IMF இடம் எடுப்பது பிச்சை தொடர்வது இன அழிப்பா..? யாழ்  பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்

videodeepam