ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எதிர்காலத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர். சில கட்சிகள் மற்றும் தனியாட்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பார்கள்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் சிலர் எதிர்காலத்தில் இணைவார்கள்.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலை பரந்த கூட்டணியாக எதிர்கொள்ளவுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.
எனவே அதிலிருந்து ஒருவரை மக்கள் எளிதாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.