மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
அவ் வழக்கில் அச்சுவேலி பொலிசாரின் மேலதிக அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்களில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சட்டம் ஒழுங்கை மீறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை மல்லாகம் நீதிமன்றம் விடுவித்தது.