deepamnews
இலங்கை

இலங்கையில் வறுமை நிலை இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி அறிக்கை

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக, மேலும் 2.7 மில்லியன் இலங்கையர்கள் இப்போது வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது வறுமைநிலையை  நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்து, ஜனவரி முதல் எப்போதும் இல்லாத அளவுக்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

இதனால், 2021 –  2022 ஆம் ஆண்டுக்கு இடையில் இலங்கையில் வறுமை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.1 சதவீதத்திலிருந்து 25.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வறுமை வீதம் 2019 இல் 11.3 சதவீதத்திலிருந்து 2020 இல் 12.7 சதவீதமாக அதிகரித்தது.

2020 இல் மட்டும் 3 இலட்சம் புதிய ஏழைகள் உருவாகியுள்ளனர் என்றும், உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் நுவரெலியாவில் விபத்து – 7 பேர் பலி, 57 பேர் காயம்

videodeepam

யாழ் வடமராட்சியில் கிணற்றுக்குள் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

videodeepam

157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாண ஆலயங்களில் பூஜை வழிபாடுகள்!

videodeepam