ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடற்படை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்ற படகின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்தார்.
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
அதில் சந்தேகப்படும் படி சென்றுகொண்டிருந்த படகை தொடர்ந்து நிறுத்தச் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் விரைந்து சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.
படகு நிற்காமல் சென்றதால் விதிமுறையின் படி துப்பாக்கியால் சுட்டதாகவும், படகு மேற்படி முன்னேறாமல் இருக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த மீனவருக்கு முதலுதவி அளித்து ஹெலிக்காப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம் என கடற்படையால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.