deepamnews
இலங்கை

இதொகாவுக்கு விடுத்த அழைப்பு தற்பொழுது  சாத்தியப்பட்டுள்ளது – மனோ கணேசன் தெரிவிப்பு

மலையகத் தமிழர்களின் வளர்ச்சி, எழுச்சிக்காக இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு விடுத்த அழைப்பு தற்போது சாத்தியப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “மலையக மக்கள் உழைப்பாளர்களாக இலங்கைக்கு அடியெடுத்து வைத்து 2023 ஆம் ஆண்டுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாங்கள் இங்கு உழைப்பதற்கு மட்டும் வரவில்லை. ஆளவும்தான் வந்துள்ளோம்.

மலையகத்தில் இருந்து வெளியே சென்று தொழில் செய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்களை தூக்கி விடுவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கான கடப்பாடு அனைவருக்கும் உள்ளது.

இலங்கை அரசாங்கமும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தை சமூக வளர்ச்சிக்காக வகுக்க வேண்டும். தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது. எனினும், அவற்றை பகிர்ந்துக்கொள்வதற்கு தோட்ட நிறுவனங்கள் தயாரில்லை.

எனவே, தொழிலாளர்களுடன் வருமானங்களை பகிர்ந்துகொள்ள தோட்ட நிறுவனங்கள் தாமாக முன்வர வேண்டும்.

இல்லையேல் தோட்ட நிறுவனங்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம். எங்கள் பொறுமையையும், நிதானத்தையும் எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது” என்றார்.

Related posts

அப்பாவிகளைத் தண்டிக்காதே, குற்றவாளிகளைத் தப்பவிடாதே – அலெக்ஸுன் படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்

videodeepam

நீர் தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!

videodeepam

80 இலட்சம் முட்டைகள் சதொசவுக்கு விநியோகம்.

videodeepam