deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நிதி அமைச்சுக்கு கடிதம்

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரியே எழுத்து மூல கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

பஃவ்ரல் அமைப்பு(PAFFREL),தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் அமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகியன இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

மக்கள் இறையாண்மையின் அடிப்படை அம்சமான தேர்தலை நடத்துவதற்கு உரிய நிதியை விடுவிப்பதன் மூலம் ஒத்துழைப்பை வழங்குமாறு குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியீடு

videodeepam

துருக்கி நிவாரணப் பணிகளுக்காக 300 பேர் அடங்கிய இராணுவக் குழு தயார் நிலையில்

videodeepam

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு இல்லை

videodeepam