deepamnews
இலங்கை

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

இன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி பாண் விலையினை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர், என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கோதுமை மாவின் கையிருப்பு போதுமானளவு இருந்தால், பாண் விலையினை குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன்படி, இன்றைய தினம் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா, சீனா, ஜப்பானுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு – செஹான் சேமசிங்க தெரிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இடைநிறுத்தக் கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

videodeepam

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை

videodeepam