டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்டு ஓவல் நேற்றய தினம் (02-11-2022) இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பாக அதிகப்பட்டமாக விராட் கோலி 64 ஓட்டங்களையும் ராகுல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் சார்பாக பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் 16 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி 151 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற அடிப்படையில் மீண்டும் களமிறங்கிய பங்களாதேஷ் அணி அணைத்து ஓவர்கள் நிறைவில் 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் 5 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று குழு இரண்டில் 6 புள்ளிகளுடன் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.