deepamnews
இலங்கை

மீண்டும் அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை

சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை மரக்கறிகளின் விலையும் வழமையை விட அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 420 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் போன்சீ 520 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோவா 360 ரூபாவாகம், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணி 280 ரூபாவாகம், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும், தேசிகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தக்காளி 440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையில் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் இருக்குமா? – சி.வி.கே. சிவஞானம் வெளியிட்ட தகவல்

videodeepam

வேலைநிறுத்த நடவடிக்கையில் மாபெரும் வெற்றி – தேசிய தொழிற்சங்க தலைவர் லால்காந்த தெரிவிப்பு

videodeepam

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரஜினிகாந்தின் உதவியை நாடும் இலங்கை

videodeepam