deepamnews
இலங்கை

கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (02) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

யாழில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள்!

videodeepam

கொழும்பிலும் தியாக தீபன் திலீபன் நினைவேந்தல்

videodeepam

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

videodeepam