deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் – இராணுவ கட்டளை தளபதி அறிவிப்பு

யாழ்ப்பாணத்தின் சோதனை சாவடிகளை அமைத்து, வீதி சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் , யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர்  ஜெனரல்  சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து , வாகனங்களை பரிசோதிப்பதன் மூலம் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வியாபாரிகள் அல்லது போதைப்பொருள் பாவிப்போர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு தகவல்களை தந்து உதவுமாறு மக்களிடம் கோருகிறோம். தகவல்களின் இரகசிய தன்மை பேணப்படும். அதனால் மக்கள் பயமின்றி இராணுவ முகாமில் தெரிவிக்கலாம்.

எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி சமூகத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காகவே , வீதி சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். அதனால் பொது மக்கள் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி.

videodeepam

மின்சார கட்டண திருத்தம் சாத்தியமற்றது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam

இலங்கை மத்திய வங்கியில் மாயமான பணம் குறித்து வெளியான தகவல்

videodeepam