deepamnews
இலங்கை

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற 10 பேரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற 10 பேரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்த்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கடந்த 6 ஆம் திகதி  ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைதிகள் சிலர் தப்பிச் சென்றிருந்தனர்.

இவ்வாறு தப்பிச்சென்ற கைதி ஒருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் வெலிகந்த – சிங்கபுர வனப்பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டார்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே கைதி கண்டுபிடிக்கப்பட்டார்.

எனினும், உணவின்றி சுகவீனமுற்றிருந்த குறித்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

31 வயதான மொஹான் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் தொடர்ந்தும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

அராலி மத்தியில் வீடு தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது!

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு..!

videodeepam

நெடுந்தீவில் கூட்டுப்படுகொலை – சந்தேக நபர் கைது:  தொடரும் பரபரப்பு…!

videodeepam