deepamnews
சர்வதேசம்

ரஷ்யா மீதான 400க்கும் அதிகமான யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக உக்ரைனின் ஜனாதிபதி தெரிவிப்பு

ரஷ்யா யுக்ரைனின் கெர்ஷன் பகுதியில் விட்டுச் சென்ற 400க்கும் அதிகமான மறைக்கப்படாத யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக யுக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கெர்ஷன் பகுதியில் ரஷ்ய படையினர் வெளியேறிய பின்னர், அங்கு பொதுமக்கள் மற்றும் படையினரின் சடலம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், யுக்ரைன் அதிகாரிகள் கெர்ஷன் நகருக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், பயணத் தடையையும் விதித்துள்ளனர்.

ரஷ்ய இராணுவம், மற்றைய பகுதிகளை விட்டுச் சென்றது போன்றே கெர்ஷனிலும் யுத்த குற்றங்களை செய்துள்ளது.

எந்தவொரு சந்தேகமும் இன்றி குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து புச்சா, இஸியம் மற்றும் மரியபோல் ஆகிய நகரங்களில் இருந்து மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.

videodeepam

எரிமலை வெடிப்பை அடுத்து தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகியது புதிய தீவு

videodeepam

உலக சாதனை படைத்த வெங்காயம்.

videodeepam