சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாயின் ஊடான மேற்கொள்ளப்படும் பயணங்களை தடுக்க அவசர சட்டத்தை கொண்டு நடைமுறைப்படுத்துமாறு 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று ‘போலி புகலிடக் கோரிக்கையாளர்கள்’ என்று நம்பப்படும் நபர்களை எளிதாக்கும் வகையில், நவீன அடிமைச் சட்டங்களில் எளிய மாற்றத்தை விரைவாக செயற்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உள்துறைச்செயலாளர் சுயெல்லா ப்ரேவர்மன் ஆகியோருக்கு இந்த கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆங்கில கால்வாய் கடவுளினால் தீர்க்க முடியாத பிரச்சினையாக காணப்படுவதாகவும், எளிய கொள்கையுடன் அதனை தீர்க்க வேண்டும் என்றும் முன்னாள் பிரெக்சிட் செயலாளரான டேவிட் டேவிஸ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
1922ஆம் ஆண்டு செல்வாக்கு மிக்க டோரி பின்வரிசைக் குழுவின் தலைவரான சர் கிரஹாம் பிராடி உட்பட கையொப்பமிட்டவர்கள், அல்பேனியா போன்ற பாதுகாப்பான நாடுகளில் இருந்து பயணிக்கும் பொருளாதாரக் குடியேற்றக்காரர்களை விரைவாக திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆள் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் மக்கள், அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளது.