deepamnews
இலங்கை

இலங்கை பெண்களை மனித கடத்தல் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 3.57 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஈ.குஷானை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

இந்தநிலையில் இன்று நாடு திரும்பியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இலங்கை பெண்களை ஓமானில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் மனித கடத்தலுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் இதுவரை பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கால்நடைகள் உயிரிழந்தமைக்கு திடீர் குளிர் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே காரணமாகும் – விவசாயத் திணைக்களம் அறிவிப்பு 

videodeepam

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

videodeepam

நிதி நெருக்கடி உள்ளதாக திறைசேரி இதுவரை அறிவிக்கவில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

videodeepam