deepamnews
இலங்கை

இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாட்டில் இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

3,740 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்லொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் சமையல் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரிக்கும் என்பதால், தேவைக்கு ஏற்ப போதுமான அளவு எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அரிசி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

videodeepam

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்கள் – விரிவுரையாளர்களின் ஆலோசனையை பெற தீர்மானம்.

videodeepam

வவுனியாத் தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகர் விலக வேண்டும் – சச்சிதானந்தம்

videodeepam