திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. தகுந்த சோளம் கிடைத்தமையினால் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தால் நாளாந்தம் 60,000 திரிபோஷா பக்கற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தாய்மார்களுக்கான திரிபோஷா பொருட்கள் உற்பத்தி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.