deepamnews
இலங்கை

வரவு செலவு திட்டத்துக்கு எதிராக  இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை

பாதீட்டை தோற்கடிக்க வலியுறுத்தித் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

துறைமுகம், சுகாதாரம், வர்த்தக வலயங்கள், எரிபொருள் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனம், விருந்தகம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க, இந்த பாதீட்டினூடாக அரசாங்கம் பல்வேறு துறைகளை தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதுடன் ஏனைய நாடுகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு சகல துறையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்த தீர்மானம் – செயலாளர் நாயகம் அறிவிப்பு

videodeepam

இலங்கையில் மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

videodeepam

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துங்கள் – கஜேந்திரகுமார் கோரிக்கை

videodeepam