deepamnews
இலங்கை

வெங்காயம் – டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் – அரசாங்கம் நடவடிக்கை

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த மே  18ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் டின் மீன்களுக்கு அறவிடப்பட்டுவந்த 100 ரூபா விசேட பண்ட வரி நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரஜினிகாந்தின் உதவியை நாடும் இலங்கை

videodeepam

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் – பந்துல!

videodeepam

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam