ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னான்டஸுக்கு (Cristina Fernandez de Kirchner) 6 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது வேலைத்திட்ட ஒப்பந்தமொன்றை தமது நண்பர் ஒருவருக்கு வழங்கியமையினூடாக தவறான நிர்வாகக் குற்றம் இழைத்துள்ளதாக 69 வயதான கிறிஸ்டினா பெர்னான்டஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருப்பினும், அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளால் வழங்கப்பட்டுள்ள சில சலுகைகள் காரணமாக அவர் சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கான வாய்ப்பில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடியில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள அவருக்கு, வாழ்நாள் முழுவதும் அரச நிறுவனமொன்றில் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.