deepamnews
இலங்கை

இந்திய கடற்படைத் தளபதி இன்று இலங்கைக்கு விஜயம் -இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு 

கடற்படைத் தளபதி அட்மிரல் ராதாகிருஸ்ணன் ஹரிகுமார், இன்று முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதியன்று திட்டமிடப்பட்டுள்ள, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் ஆணையிடும் அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஹரிகுமார், இலங்கையின் சிரேஸ்ட மற்றும் பாதுகாப்புத் தலைமைகளுடன் பேச்சு நடத்துவார்.

அத்துடன் அவர் இலங்கை ஆயுதப்படையின் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் விஜயம் செய்து பல்வேறு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வார் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச நிதி மாநாட்டில் ஜனாதிபதி ரணில்  உரை –  நிதி நெருக்கடி தொடர்பில் அறிவிப்பு.

videodeepam

யாழ்ப்பாணம் வந்தார் ஜனாதிபதி -வலி.வடக்கில் 278 ஏக்கர் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு

videodeepam

முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை

videodeepam