deepamnews
சர்வதேசம்

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒரே நாளில் 18 எச் -6 விமானங்களை அனுப்பியது சீனா

அணுவாயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய 18 குண்டுவீச்சு விமானங்களை தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் சீனா நேற்று அனுப்பியதாக தாய்வான் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் தாய்வானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு வலயத்துக்குள் 21 விமானங்கள் வந்ததாகவும் அவற்றில், அணுவாயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய  18 எச்-6 குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும் எனவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒரே நாளில் நுழைந்த அதிக எண்ணிக்கையான எச்-6 விமானங்களின் எண்ணிக்கை இதுவாகும்.  இதற்கு முன் 2021 ஒக்டோபரில் 16 விமானங்கள் நுழைழந்திருந்தன.

தாய்வானிலிருந்து உணவு, பானங்கள், மதுபானம், மீன் முதலான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடந்த வாரம் சீனா தடை விதித்திருந்தது. சீனாவின் இத்தடையானது சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதுடன் தாய்வானுக்கு எதிரான பாரபட்சமாகும் என தாய்வான் பிரதமர் சூ செங் சாங் விமர்சித்திருந்தமை குறிப்பித்தக்கது.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் யுக்ரைனுக்கு சென்றுள்ளார்.

videodeepam

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

videodeepam

நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் – ஜெசிந்தா ஆர்டென்

videodeepam