deepamnews
இந்தியா

திருக்கேதீஸ்வரத்தை மீட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கருத்து

மன்னாரிலுள்ள பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் அங்கு இந்தியா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். 

மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக இந்திய மத்திய அரசு பிரகடனப்படுத்தியதை முன்னிட்டு, காசியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார் .

பாரதியாரின் 140 ஆவது பிறந்தநாளையொட்டி பல நிகழ்வுகள் பாரதத்தில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கமைய, உத்தரபிரதேச அரசாங்கம் எதிர்வரும்  16 ஆம் திகதி  வரை பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, “காசி தமிழ் சங்கமம்” நிகழ்வை நடத்துகின்றது

பாரதியார் வாழ்ந்த வீடான  சிவமடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ் . ஜெய்சங்கர்  இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வர ஆலயத்தை இந்தியா மீட்டெடுத்துள்ளதாகவும் 12 வருடங்கள் மூடப்பட்டிருந்த இந்த ஆலயத்தின் மறுமலர்ச்சி இந்தியாவின் ஆர்வத்தினால் சாத்தியமானதெனவும் தெரிவித்துள்ளார். 

Related posts

கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு –  இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

videodeepam

இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

videodeepam

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் -நரேந்திர மோடி தெரிவிப்பு.

videodeepam