deepamnews
இலங்கை

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி உறுதி 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும்  பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி.

videodeepam

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்பு

videodeepam

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் கனடா பிரதமர் விடுத்த அறிக்கை

videodeepam