deepamnews
இலங்கை

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 250 ரூபாவாகும். இதேவேளை, ஒரு கிலோ வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 190 ரூபாவாகும். அதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீனின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபாயாகும்.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (13) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதி ஒருவர் உயிரிழப்பு

videodeepam

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நேற்றையதினம் இரவு முதல் நீக்கம்!

videodeepam