deepamnews
இலங்கை

2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

2023ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது.

அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார்.

அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று சப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிபர் வலயத்திற்கு மாற்றம்.

videodeepam

விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாம்: பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

videodeepam