deepamnews
இலங்கை

அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

இலங்கை சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படும் போது, அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தியத்தலாவ இராணுவ விஞ்ஞான பிரிவு கெடட் அதிகாரிகளின் 97 ஆவது அணிவகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

தியத்தலாவ இராணுவ விஞ்ஞான கெடட் பிரிவின் 351 அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நான்கு வெளிநாட்டு கெடட் அதிகாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, அதிகார சபைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும்.

கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , திறமையான கெடட் அணிக்கு சாம்பியன் கொடியையும் கெடட் அதிகாரிகளுக்கு வாளையும் பரிசளித்தார்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

videodeepam

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

videodeepam