deepamnews
இலங்கை

ஜனவரி 10க்கு முன்னர் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே  தெரிவிப்பு

எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கலைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேர்தல் திகதியை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்!

videodeepam

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு – 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை

videodeepam

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் கோரிக்கை  

videodeepam