deepamnews
இலங்கை

முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க இறக்குமதி செய்வதே தீர்வு

சந்தையில் ஏற்பட்டிருக்கும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முட்டை இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை. முட்டை இறக்குமதி செய்தால் ஒரு முட்டை 25ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதால் பேக்கரி உற்பத்திகளை தயாரிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பெரியளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் இயற்கையாகவே முட்டைக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்,

மூலப்பொருட்கள் உட்பட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்களில் சிலர் முட்டை உற்த்தியில் இருந்து ஒதுங்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேக் உட்பட பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அளவு முட்டையை பெற்றுக்கொள்ள சந்தையில் முட்டை இல்லை. அதேநேரம் முட்டை விநியோகிப்பதும் தேவையாள அளவில் 50வீதமாகும். அதனால் சிறிய மற்றும் நடு்த்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் கேக் உட்பட முட்டை தேவைப்படும் உற்பத்திகளை நிறுத்தி இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை குறைப்பதற்கு முட்டை இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்து 25ரூபா அடிடையில் விற்பனை செய்ய முடியும் என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கும் சாத்தியம்

videodeepam

துணைவேந்தர் எமது கலாச்சாரங்களை பாதுகாப்பவராக இருக்க வேண்டும் ; தெரிவில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது – அங்கஜன் எம்.பி தெரிவிப்பு.

videodeepam

இலங்கைக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம் – டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறை

videodeepam