பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதவிகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்புக் குழுவும் உள்நாட்டு ஊடகமும் இணைந்து நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரித்தானியப் பிரதமர் டொமினிக் ராப் மற்றும் சுகாதார அமைச்சர் பார்க்லே உட்பட கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் தோல்வியடையும் அபாயம் உள்ளதாக தொடர்புடைய ஆய்வு தெரிவிக்கிறது.
நாட்டின் வெளிவிவகார, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சர்களும் தமது பதவிகளை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படும் பட்டியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.