deepamnews
இலங்கை

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் – பந்துல!

சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகள் தாமதப்படுத்தப்படுவதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அரசாங்கத்தின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கு கூட நிதியை தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

videodeepam

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – சாணக்கியன்

videodeepam

கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

videodeepam